/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டவிரோத மின்கம்பி வேலி அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை
/
சட்டவிரோத மின்கம்பி வேலி அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை
சட்டவிரோத மின்கம்பி வேலி அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை
சட்டவிரோத மின்கம்பி வேலி அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை
ADDED : நவ 03, 2025 12:00 AM
சிவகாசி:  பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மின்கம்பி வேலி அமைக்கும் விவசாயிகள் ,நில உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாத்துார் அருகே  சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, சட்டத்திற்கு முரணாக மின்கம்பி வேலி அமைப்பது கடுமையான குற்றம்  என வனத்துறை தெரிவித்துள்ளது.
சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன் செய்தி குறிப்பு: மின்கம்பி வேலி மூலம்  விலங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 ன் கீழ் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும். விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இத்தகைய சட்டவிரோத மின்கம்பி வேலி அமைப்பதைத் தவிர்த்து, வனவிலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து நிவாரணம் பெற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை உள்ளடக்கிய விளைநிலங்களில் சட்ட விரோத மின்கம்பி வேலி தொடர்பான தகவல் கிடைத்தால், உடனடியாக சிவகாசி வனச்சரக அலுவலர் 84890 54853, வனக்காப்பாளர் 97894 48985 ஸ்ரீவில்லிபுத்துார் துணை இயக்குனர் அலுவலகம்  04563-260565 என்ற  எண்களுக்கு  தகவல் தெரிவிக்கலாம், என அதில் தெரிவித்துள்ளார்.

