/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்களின் நேர மாற்றத்தால் கிராஸிங் சிக்கலுக்கு தீர்வு
/
ரயில்களின் நேர மாற்றத்தால் கிராஸிங் சிக்கலுக்கு தீர்வு
ரயில்களின் நேர மாற்றத்தால் கிராஸிங் சிக்கலுக்கு தீர்வு
ரயில்களின் நேர மாற்றத்தால் கிராஸிங் சிக்கலுக்கு தீர்வு
ADDED : டிச 25, 2024 03:46 AM
ராஜபாளையம் : ரயில்வே கால அட்டவணை ஜன. மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில் புதிய கால அட்டவணை மூலம் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பல ஆண்டுகளாக இருந்த கிராசிங் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
ஜன.1 முதல் இந்திய அளவில் ரயில்வே கால அட்டவணை புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. ரயில்களின் இயக்கத்தில் கடந்த கால சூழல், கட்டமைப்பு மேம்பாடு தேவைகள் மக்கள் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு என்.டி.இ.எஸ்.,ல் அதிகார பூர்வ தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் இதில் பதிவேற்றப்பட்டுள்ள தகவலின்படி ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களின்
கிராசிங்கிற்காக வீணாகும் பயணிகளுக்கான நேரம் சரியாவதற்கான நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் மிக நீண்ட கிராசிங் இல்லாத பகுதியாக ராஜபாளையம் சங்கரன் கோயில் 33 கி.மீ., ரயில் வழித்தடம் இருந்து வருகிறது. இதன்படி மயிலாடுதுறை செங்கோட்டை தினசரி ரயில் ராஜபாளையத்திற்கு இரவு 7:05 க்கு வந்துவிடும்.
செங்கோட்டையில் இருந்து வரும் பொதிகை 7:40 க்கு வருவதால் அதுவரை கிராசிங் சிக்கலால் 35 நிமிடம் வரை தென்காசி மாவட்ட பயணிகள் தினமும் காத்திருந்து பயணிக்கின்றனர்.
தற்போது அப்டேட் செய்யப்பட்ட ரயில்களின் நேர மாற்றம் காரணமாக இரவு 8:00 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ராஜபாளையம் வர உள்ளது. இதனால் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் நேர பிரச்சனை இன்றி சங்கரன்கோவில் சென்று கிராஸிங்கிற்கு நிற்க ஏதுவாகும்.
இதனால் தென்காசி மாவட்ட மக்களின் பல வருட தாமத பயணத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வேயின் அதிகாரப்பூர்வ கால அட்டவணை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

