ADDED : மார் 17, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ. 2.47 கோடியில் அமைக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா, ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
டாக்டர் அய்யனார், துணை மேயர் விக்னேஷ் பிரியா கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.19. 30 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் ரேணு நித்திலா, மாநகர செயலாளர் உதயசூரியன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

