/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாழை மரங்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு
/
வாழை மரங்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 08, 2025 01:08 AM

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் வீசிய சூறாவளியில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்த பாதிப்பை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலெக்டர் உடன் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி சின்ன செட்டி குறிச்சி சிதம்பரபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறாவளியால் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் விரக்தி அடைந்த நிலையில், நேற்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலெக்டர் சுக புத்ரா ,வேளாண் அதிகாரிளுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது : பலத்த காற்றிற்கு 70 ஏக்கருக்கும் மேல் வாழை மரங்கள் பலன் தரும் சமயத்தில் சாய்ந்து விட்டன. விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு அரசு மூலம் நிவாரணம் கிடைப்பதற்கு உரிய பணிகளை செய்து வருகிறோம்.
வாழை மரங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை என விவசாயிகள் கூறினர். எதிர் காலத்தில் இது போன்ற சூழ்நிலைகள் வந்தால் அதை எதிர்கொள்வது பற்றியும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார்.
உடன் வருவாய்துறை, வேளாண் துறை அதிகாரிகள் இருந்தனர்.