ADDED : அக் 08, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் செய்தி குறிப்பு : தமிழ்நாடு நகர் புற உள்ளாட்சி விதிகளின்படி, அருப்புக்கோட்டை நகராட்சிக்கு 2025 -- 26 ம் , ஆண்டின் அக். 1, 2025 முதல் 31 மார்ச் 2026 வரையிலான 2 ம் அரையாண்டிற்கான சொத்துவரி தொகையை அக்.31க்குள் செலுத்தும் வரிவிதிப்பு தாரர்களுக்கு அவர்கள் செலுத்தும் சொத்து வரித் தொகையில் 5 சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தங்களது சொத்து வரி தொகைகளை நகராட்சி கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்களில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு செலுத்தினால் செலுத்தப்படும் நாள் வரை ஒவ்வொரு மாதம் வரி தொகையில் 1 சதவிகிதம் வட்டி சேர்த்து கணக்கிட்டு வசூலிக்கப்படும். என தெரிவித்துள்ளார்.