/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி - திருத்தங்கல் மெயின் ரோடு சேதம்
/
சிவகாசி - திருத்தங்கல் மெயின் ரோடு சேதம்
ADDED : அக் 20, 2024 06:34 AM
சிவகாசி, : சிவகாசியில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் அண்ணா காலனி அருகே ரோட்டின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டில் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
இயல்பாகவே சிவகாசிக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும். இந்நிலையில் தற்போது தீபாவளி நெருங்கும் நேரம் என்பதால் கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. தவிர பள்ளி, கல்லுாரி மாணவர்களும் இந்த ரோட்டில்தான் வந்து செல்கின்றனர். . மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி மறைத்து விடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தற்காலிகமாக ரோட்டில் உள்ள பள்ளம் தெரிவதற்கு அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.