/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் சேதமான ரயில்வே பீடர் ரோடு --தினமும் விபத்து அச்சத்தில் மாணவர்கள்
/
ராஜபாளையத்தில் சேதமான ரயில்வே பீடர் ரோடு --தினமும் விபத்து அச்சத்தில் மாணவர்கள்
ராஜபாளையத்தில் சேதமான ரயில்வே பீடர் ரோடு --தினமும் விபத்து அச்சத்தில் மாணவர்கள்
ராஜபாளையத்தில் சேதமான ரயில்வே பீடர் ரோடு --தினமும் விபத்து அச்சத்தில் மாணவர்கள்
ADDED : செப் 15, 2025 05:54 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில்வே பீடர் ரோட்டில் மேல்நிலைப் பள்ளிகள், ரயில் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் பெயரளவிற்கு சீரமைக்கும் பணி நடப்பதை ஆய்வு செய்து முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும்.
ராஜபாளையம் நகர் பகுதி ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு ரயில்வே பீடர் ரோடு அமைந்துள்ளது. இதில் ஏற்கனவே அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள், துவக்கப்பள்ளி அமைந்துள்ள நிலையில் 24 மணிநேரமும் ரயில்கள் வந்து சென்று பயணிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தவிர புது பஸ் ஸ்டாண்ட் செல்வதை எதிர்க்க பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் உபயோகிக்கும் இச்சாலையில் உள்ள சீரற்ற மேடு பள்ளங்கள் ஆபத்தை விளைவிப்பதுடன், வேக கட்டுப்பாடு குறியீடுகள், பாதசாரிகள் நடைமேடை, எச்சரிக்கை பலகைகள் என எதுவும் செயல்பாடு இல்லை.
இது குறித்து சரவணன்: இப்பகுதியை கடக்கும் பஸ்கள், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்பவர்கள் அதிக வேகத்தில் கடப்பதும் மாணவர்கள், பாதசாரிகள், மக்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே உள்ள மேடு பள்ளங்களை பெயரளவுக்கு சீரமைக்கின்றனர். முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி ரோடுகளை மேம்படுத்தி பாதுகாப்பு குறியீடுகள் அமைத்து வேகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.