/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த இருக்கைகள், இருண்டு கிடக்கும் ரோடு காரியாபட்டி மக்கள் அவதி
/
சேதமடைந்த இருக்கைகள், இருண்டு கிடக்கும் ரோடு காரியாபட்டி மக்கள் அவதி
சேதமடைந்த இருக்கைகள், இருண்டு கிடக்கும் ரோடு காரியாபட்டி மக்கள் அவதி
சேதமடைந்த இருக்கைகள், இருண்டு கிடக்கும் ரோடு காரியாபட்டி மக்கள் அவதி
ADDED : பிப் 18, 2024 12:38 AM

காரியாபட்டி: நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் ஹைமாஸ் விளக்கு இல்லாததால் இரவில் இருளாக இருப்பதால் மக்கள் சிரமம், முக்கு ரோட்டில் பஸ்களை ரோட்டோரத்தில் நிறுத்துவதால் இடையூறு ஏற்பட்டு, மற்ற வாகனங்கள் கடந்து செல்வதில் அவதி, பஸ் ஸ்டாண்டில் நிழற்குடையில் உள்ள இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் பயணிகள் உட்கார சிரமம் ஏற்படுகிறது.
காரியாபட்டி பேரூராட்சியில் சிலோன் காலனியில் குடிநீர் குழாய் பதிக்காததால் தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. புதிய வாறுகால் தோண்டும் பணியின் போது, பழைய கான்கிரீட் கற்களை ரோட்டோரத்தில் போடுவதால் இடையூறு ஏற்படுகிறது. காலை, மாலை பள்ளி நேரங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் ஹைமாஸ் விளக்கே இல்லாததால் இருளாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மக்கள் கடந்து செல்ல படாத பாடுபடுகின்றனர். முக்கு ரோட்டில் பஸ்களை ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். மற்ற வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட நிழற்குடையில் இருக்கைகள் துருப்பிடித்து சேதம் அடைந்துள்ளன.
மழை வெயிலுக்கு மக்கள் ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அருப்புக்கோட்டை செல்லும் பஸ்கள் நிழற்குடை அருகே நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை கண் துடைப்பாகி போனது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ்களை முக்கு ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு மற்ற வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. திருச்சுழி ரோட்டில் பஸ்களை நிறுத்தலாம்.
- ஆறுமுகம், தனியார் ஊழியர்.
அருப்புக்கோட்டை செல்லும் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை கட்டப்பட்டது. பல ஆண்டுகளானதால் இருக்கையில் துருப்பிடித்து சேதமடைந்து கிடக்கின்றன. மழை வெயிலுக்கு பயணிகள் ஒதுங்க முடியவில்லை.
- சித்துராமன், தனியார் ஊழியர்.
சிலோன் காலனியில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வழிச்சாலையில் இருளாக இருப்பதால் மக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.
- சோணை, விவசாயி.