/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான நிழற்குடை, ஆக்கிரமிப்பால் நெருக்கடி
/
சேதமான நிழற்குடை, ஆக்கிரமிப்பால் நெருக்கடி
ADDED : ஆக 02, 2025 02:22 AM

காரியாபட்டி:' ரோட்டோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதுடன் ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட நிழற்குடை பயன்பாடு இன்றி உள்ளது.
காரியாபட்டியில் ஆக்கிரமிப்பால் பல்வேறு இடையூறுகள், பிரச்னைகள் இருப்பதை யாருமே உணரவில்லை. ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக இருப்பது ரோட்டோர ஆக்கிரமிப்புகள் தான்.
சிலரது பிழைப்பு என பலர் நினைக்கின்றனர். அதுவே பிரச்னைக்கு எவ்வளவு காரணமாக இருக்கிறது.
அருப்புக்கோட்டை செல்லும் பயணிகள், கடைகள் முன் நின்று பஸ் ஏறி சென்றனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனை அறிந்து ரூ.பல லட்சம் செலவில் நிழற்குடை அமைக்கப்பட்டது. பயணிகளுக்கு பெரிதும் வரப்பிரசாதமாக அமைந்தும், பயன்படுத்த முடியாமல் போனது.
நிழற்குடையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்ததால் பயணிகள் செல்ல வழியில்லை. மழை நேரங்களில் கூட ஒதுங்கி நிற்க இடமளிக்காமல் பொருட்களை வைத்து ஆக்கிரமித்தனர். தற்போது சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக இருந்து வருகிறது.
அருப்புக்கோட்டை, மதுரை வழியாக செல்லும் பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்துவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியான நிலை இருந்தது.
இதனை சரி செய்ய நிழற்குடை அருகே அருப்புக்கோட்டை வழியாக செல்லும் பஸ்சை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கண்துடைப்புக்காக ஒரு சில நாட்கள் மட்டுமே நிறுத்திவிட்டு பின் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
நிழற்குடை தூசி படிந்து அசுத்தமாக கிடக்கிறது. விஷ பூச்சிகள் அடையும் இடமாக மாறி வருகின்றன.
வாகன ஓட்டிகள் சிரமம் திருமலை, தலைவர், கனிமவள, நீர்வள, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம்: வாகன ஓட்டிகள் பஜாரில் இருந்து முக்கு ரோடு வரை படாதபாடு படுகின்றனர். என்றைக்காவது தீர்வு ஏற்படாத என ஏக்கத்துடன் கடந்து செல்கின்றனர்.
நிழற்குடை சேதம் அடைந்து, பயணிகள் யாரும் பயன்படுத்த முடியாமல், சமூக விரோத செயல்களும், ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு பொருட்கள் வைக்கும் இடமாகவும் மாறியது.
பயணிகள் வெயில் மழைக்கு அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் புகுகின்றனர்.
கடைக்காரர்களும் வியாபாரம் பாதிப்பதாக புலம்புகின்றனர். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் ஆதரவு துரைசிங்கம், விவசாயி: ரோட்டோரம் விற்கப்படும் காய்கறிகளில் துாசி படிந்து பல்வேறு தீமைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆக்கிரமிப்பு கடை களுக்கு சில கட்சிக்காரர்கள் ஊக்கமளிக்கின்றனர்.
மக்கள் பாதிக்கப்படுவதை அறிய வேண்டும். போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, அருப்புக்கோட்டை வழியாக செல்லும் பஸ்சை நிழற்குடை அருகில் நிறுத்த வேண்டும்.
நிழற்குடையை பராமரித்து, உடைந்த சேர்களை சீரமைக்க வேண் டும்.
காய்கறி விற்பவர்களுக்கு தேவையான இடம் ஒதுக்கி, பாதுகாப்பாக விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.