/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்வீஸ் ரோட்டில் அறிவிப்பு பலகைகளால் அபாயம்
/
சர்வீஸ் ரோட்டில் அறிவிப்பு பலகைகளால் அபாயம்
ADDED : ஆக 23, 2025 11:18 PM

விருதுநகர்: விருதுநகரில் கலெக்டர் அலுவலக பாலப் பணிகள் நடந்து வரும் சர்வீஸ் ரோட்டில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் டைவர்ஸன் அறிவிப்பு பலகைகளால் டூவீலர் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
விருதுநகரில் கலெக்டர் அலுவலக பாலப்பணிகள் பிப். முதல் துவங்கி நடந்து வருகிறது. பணிகள் வேகமெடுப்பதால் டைவர்ஸன் பலகைகள் அதிகம் வந்துள்ளன. இதில் ஒன்று கலெக்டர் அலுவலக வாயிலின் பக்கத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
சிறிது ரோட்டிலும் நீட்டிக் கொண்டிருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக கார்கள், பஸ்கள் அதிகம் வருகின்றன. அதுவும், கலெகடர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்றால் அப்பாதை முழுவதும் வாகனங்கள் அடைத்து நிற்கும்.
இந்நிலையில், டைவர்ஸன் பலகைகள் தற்போது நீட்டிக் கொண்டிருப்பது டூவீலர் வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் வெளிச்சம் போதாததால் மக்கள் இவ்வழியாக வந்தால் விபத்தை சந்திக்க நேரிடும். எனவே அவற்றை உள்ளே எடுத்து போட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.