ADDED : ஜூலை 01, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியில் செந்தில்குமாருக்கு சொந்தமான அச்சகம் உள்ளது. இங்கு திருத்தங்கல் பனையடிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் 48, எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரி செய்வதற்காக வேலை பார்க்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.