/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்று; வருவாய்த்துறையினரால் சர்ச்சை
/
உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்று; வருவாய்த்துறையினரால் சர்ச்சை
உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்று; வருவாய்த்துறையினரால் சர்ச்சை
உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்று; வருவாய்த்துறையினரால் சர்ச்சை
ADDED : ஜன 07, 2025 12:28 AM

விருதுநகர்; விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உயிருடன் இருப்பவருக்கு வருவாய்த்துறையினர் இறப்பு சான்று வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காரியாபட்டி நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவரது குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக நிலம் திருச்சுழி பிள்ளையார்குளத்தில் உள்ளது.
இருளாயி நேற்று நடந்த குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த புகார் மனு: எனது பூர்வீக சொத்தை நான் இறந்த போலி சான்றிதழ் பெற்று 2024ல் டிசம்பரில் திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிலர் விற்றுள்ளனர்.
போலியாக என் பெயரில் இறப்பு சான்று பெற்று நடந்த பத்திர பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் விசாரித்து இறப்பு சான்றை ரத்து செய்ய டி.ஆர்.ஓ., ராஜேந்திரனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
டி.ஆர்.ஓ., கூறுகையில், விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை வந்ததும் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.