
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் மாத ஊதியம் வழங்காததை கண்டித்து மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்டச் செயலாளர் சுந்தர மகாலிங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.