ADDED : மார் 08, 2024 12:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம், காத்திருப்பு பேராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகக்கிளைத் தலைவர் முனியாண்டி தலைமையில் மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபால், மாவட்ட பொருளாளர் ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

