ADDED : ஜூலை 09, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : 5 கி.மீ.,க்குள் வசிக்கும் மாணவர்களை விடுதிகளில் சேர்க்கக்கூடாது என்ற உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் 35 விடுதிகள் மூடும் நிலை உள்ளது, கலெக்டரின் பராபட்சமான அறிக்கையை திரும்ப பெற்று அனைத்து விடுதிகளையும் இயங்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி கோரிக்கையை விளக்கினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலவர் கண்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.