
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகரில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைப்பது, தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட செயாளர் கார்த்திக், கோட்டச் செயலாளர் தங்கப்பாண்டியன், துணை தலைவர் பாலமுருகன் பேசினர். பொருளாளர் மூக்கையா நன்றிக்கூறினார்.