/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி விடுதியில் சேர்க்கை மறுப்பு
/
அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி விடுதியில் சேர்க்கை மறுப்பு
அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி விடுதியில் சேர்க்கை மறுப்பு
அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி விடுதியில் சேர்க்கை மறுப்பு
ADDED : அக் 25, 2024 04:44 AM
சிவகாசி: சிவகாசி அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவிகள் விடுதியில் சேர்க்கை மறுப்பதால் அரசு கல்லுாரி மாணவிகள் தவிக்கின்றனர்.
சிவகாசி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதி கடந்த ஆண்டு கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்தப்பட்டு 64 மாணவிகளை சேர்த்துக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த விடுதியில் இட நெருக்கடியால் மாணவிகள் சிரமப்பட்டனர். இதனால் பல மாணவிகள் விடுதியை காலி செய்துவிட்டு வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சிரமத்துடன் சென்று வந்தனர். இட நெருக்கடி காரணமாக வெளியூர் மாணவிகள் பலர் விடுதியில் சேராமலும் இருந்து வந்தனர்.
இதுகுறித்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சாட்சியாபுரம் மாணவர் விடுதிக்கு மாணவிகள் விடுதியை இடம் மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். சொந்த கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவுடன் மாணவிகள் விடுதியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். ஆனால் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.
64 மாணவிகள் சேர்க்கை கொண்ட விடுதியில் தற்போது 50க்கும் குறைவான மாணவிகள் மட்டுமே இருக்கும் சூழலில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு சேர்க்கை வழங்காததால் மாணவிகள் தவிப்பில் உள்ளனர். இதனால் மாணவிகள் தினமும் கல்லுாரி செல்வதற்கு அலைய வேண்டியுள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் சேர்க்கை வேண்டும் என மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.