ADDED : நவ 02, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை இரண்டாம் நாளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
இக்கோயிலில் அமாவாசை வழிபாடு, தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் ,சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர்.
வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.