நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் ஆய்வு செய்தார்.
ஆயுத அறை, கைதிகள் அறை, மற்ற வசதிகளை பார்வையிட்டார். எப் .ஐ. ஆர்., பதிவேடுகள், முக்கிய குற்ற வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வருகை பதிவேடுகள், சமூக பதிவேடுகள், சி.சி.டி.வி., கேமராக்களின் செயல்பாடுகள், போலீசாரின் குறைகள் குறித்து கேட்டறிந்தார். திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு போலீசார் உடனிருந்தனர்.