/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நோய் தாக்குதல், விளைச்சல் இன்றி தென்னை சாகுபடி பாதிப்பு: நிலையான விலை இல்லாததால் விவசாயிகள் தவிப்பு
/
நோய் தாக்குதல், விளைச்சல் இன்றி தென்னை சாகுபடி பாதிப்பு: நிலையான விலை இல்லாததால் விவசாயிகள் தவிப்பு
நோய் தாக்குதல், விளைச்சல் இன்றி தென்னை சாகுபடி பாதிப்பு: நிலையான விலை இல்லாததால் விவசாயிகள் தவிப்பு
நோய் தாக்குதல், விளைச்சல் இன்றி தென்னை சாகுபடி பாதிப்பு: நிலையான விலை இல்லாததால் விவசாயிகள் தவிப்பு
ADDED : அக் 05, 2024 03:47 AM
ராஜபாளையம்: நோய் தாக்குதல் , விளைச்சல் இல்லாமை, நிலையான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தென்னை விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், வத்திராயிருப்பு, சேத்துார், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை சாகுபடி நடந்து வருகிறது.
இப்பகுதியில் விளையும் தேங்காய்கள் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பெருமளவு அனுப்ப ப்படுகிறது. இதிலிருந்து விசிறி, கிடுகு, விளக்குமாறு, மட்டையிலிருந்து நார், கயிறு உள்ளிட்ட அனைத்து பொருள்களும் உபயோகமாகின்றன.
இந்நிலையில் தொடர்ச்சியாக வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மட்டைகள் காய்ந்து வருகின்றன. தென்னந் தோப்புகளில் இருந்த பாதிப்பு வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களுக்கும் பரவி மட்டைகள் கருகி வருகின்றன.
பசுமையான சருகுகள் கருமை நிறமாக மாறி பச்சயம் குறைந்து மொட்டையாக மாறுகின்றன. இது தவிர வேர்ப் பகுதியில் பூஞ்சான் நோய் தாக்குதல், மரங்களின் தண்டுகளில் சாறு வடிதல் என
நோய் தாக்குதல்களால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வறட்சி அதனைத் தொடர்ந்து வெள்ளை ஈ தாக்குதல் பரவியதை தற்போது வரை அதிகாரிகளால் நிரந்தர தீர்வு காண முடியாததுடன் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
தற்போது யானைகளாலும் சேதம் தொடர்ந்து வருகிறது. வேர் வாடல் நோய்களுக்காக தென்னை மரங்களை அகற்றிடவும், வறட்சியால் பட்டுப்போன மரங்களும், யானைகளால் பாதித்த மரங்களுக்கும் அரசு அறிவித்த நிவாரண தொகை முழுமையாக கிடைப்பதில்லை. இதனால் தென்னை சாகுபடி கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: நோய் தாக்குதல்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. மரங்கள் காய்ப்பு திறன் குறைந்ததால் தற்போது மொத்த விலைக்கு ரூ. 14 முதல் 15 வரை விலை நிர்ணயம் ஆகிறது. செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தாக்குதல் காரணமாக தற்காலிக விலை ஏற்றத்தை கூட அனுபவிக்க முடியவில்லை. தோட்டக்கலைத் துறையினர் நேரடி ஆய்வு செய்து பாதிப்புகளுக்கான நிவாரணம் முழுமையாக கிடைப்பதுடன் ஒருங்கிணைந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும்.