/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துார்வாராத வாறுகால், ரோடு சேதத்தால் சிரமம் விருதுநகர் நகராட்சி 31வது வார்டில் அவலம்
/
துார்வாராத வாறுகால், ரோடு சேதத்தால் சிரமம் விருதுநகர் நகராட்சி 31வது வார்டில் அவலம்
துார்வாராத வாறுகால், ரோடு சேதத்தால் சிரமம் விருதுநகர் நகராட்சி 31வது வார்டில் அவலம்
துார்வாராத வாறுகால், ரோடு சேதத்தால் சிரமம் விருதுநகர் நகராட்சி 31வது வார்டில் அவலம்
ADDED : ஜன 08, 2024 06:07 AM

விருதுநகர் : வாறுகாலை சுத்தம் செய்யாததால் சுகாதாரக் கேடு, பாதாளச்சாக்கடை மேன்ஹோல் வழியாக பொங்கும் கழிவுநீர், குவியும் குப்பை என எண்ணற்ற சிக்கல்களில் தவிக்கின்றனர் விருதுநகர் 31வது வார்டு மக்கள்.
இந்த வார்டில் திருப்பதி தெரு, கொப்பன் தெரு, மாரியப்பன் தெரு, முத்துராமன் சாவடி, வேளாந்துார் தெரு, தவுண்டு கிழக்கு தெரு உள்ளிட்ட 20க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. மாத்தநாயக்கன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள தெருக்களின் வாறுகால்களில் இருந்து பெரிய வடிகாலுக்கு செல்லும் பாதை மண் நிரம்பி தடைப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாதாளச்சாக்கடைகளை சரியாக சுத்தம் செய்யவில்லை. இதனால் பாதாளச்சாக்கடையில் அடைப்பு ஏற்படும் போது எல்லாம் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இப்பகுதியில் கட்டப்பட்ட பெண்களுக்கான சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக கொப்பன் தெருவில் ரோடுகள் தோண்டப்பட்டு சேதம் அடைந்துள்ளன. டூவீலரில் வருபவர்கள் கற்களால் இடறி விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
தெருக்களின் வாறுகால்களில் மண் நிரம்பி உள்ளதால் கழிவு நீர் பெரிய வடிகாலுக்கு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரிய வாறுகால்களில் பிளாஸ்டிக் பாட்டில், கவர்களால் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
- கண்ணன், சமூக ஆர்வலர்.
பெண்களுக்கான சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் பல ஆண்டுகளாக சிரமத்தை சந்திக்கின்றனர்.
- - இருளாயி, குடும்பத்தலைவி.
பாதாளச்சாக்கடையை சரியான முறையில் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தினமும் காலையில் மேன்ஹோல் வழியாக வெளியேறுகிறது. இதன் அருகே வசிக்கும் மக்களுக்கு துார்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
- லட்சுமி, குடும்பத்தலைவி.