/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட அளவிலான ஜூனியர்- சப் ஜூனியர் கபடி போட்டி
/
மாவட்ட அளவிலான ஜூனியர்- சப் ஜூனியர் கபடி போட்டி
ADDED : ஜூலை 19, 2025 12:22 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஜூனியர், சப்- ஜூனியர் சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கபடி போட்டிகளில் 600-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் நினைவு விளையாட்டு மன்றம், விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் தொடங்கியது. ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிறுவர்- சிறுமிகள், பள்ளிகள், கிளப் என 60 அணிகளை சேர்ந்த 600 க்கும் ஏற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.43 ஆயிரம் பரிசு கேடயத்துடன் சிறந்த வீரர்கள் மாநில அளவு போட்டிகளுக்கு தேர்வு பெறுவர்.
ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் சுப்ரமணிய ராஜா தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.