/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதியோர் இல்லத்திற்கு தீபாவளி பரிசுகள்
/
முதியோர் இல்லத்திற்கு தீபாவளி பரிசுகள்
ADDED : அக் 29, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகமும், கல்லூரியின் இயற்பியல் துறையும் இணைந்து, சேதுராஜபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கின.
கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், கலைக்கல்லூரி செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், முதல்வர் தில்லைநடராஜன், துணை முதல்வர் பவுர்ணா ஆகியோர் புத்தாடைகளையும், இனிப்புகளையும் வழங்கினர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர் ரத்தினசாமி தலைமையில், பேராசிரியைகள் சித்ராதேவி, சுபத்ரா தேவி, ஹேமா ரோஸ்லின், கண்மணி தேவி மாணவிகள் செய்தனர்.