/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆட்குறைப்பை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஆட்குறைப்பை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 12:11 AM

விருதுநகர்: பழைய அரசு மருத்துவமனைகளில் இருந்து டாக்டர்களை ஆட்குறைப்பு செய்து புதிய அரசு மருத்துவமனைகளில் நியமிக்கும் அரசு நடவடிக்கையை கண்டித்து விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகள், நான்கு பழைய அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து ஜூனியர் ரெசிடெண்ட் பதவியில் உள்ள அரசு மருத்துவர் பணியிடங்களை ஆட்குறைப்பு செய்து புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல் லுாரிகளில் மருத்துவர் பணியிடங்களை ஆட் குறைப்பு செய்வதை கைவிடவும், புதிதாக அரசு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் மருத்துவர், செவிலியர், பிற பணி யாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் கணேஷ், துணை தலைவர் மலர்வண்ணன், துணை செயலாளர் பாண்டிசெல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

