ADDED : ஜன 05, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனைக்குட்டத்தில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஆனைக்குட்டத்தில் நேற்று ஒரே நாளில் தெருவில் விளையாடிய ஐந்து வயது சிறுமி, நடந்து சென்ற மூன்று பெண்கள் உட்பட சிலரை நாய்கள் விரட்டி கடித்தன.
இதில் ஒரு பெண்கீழே விழுந்ததில் அவரை கடித்து குதறின.
காயமடைந்த அனைவரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகாசி நகரில் தினமும் தெரு நாய்களால் குடியிருப்புவாசிகள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.