/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாய்கள் தொல்லை; தண்ணீர் பிரச்னையால் சிறுநீரக கோளாறு
/
நாய்கள் தொல்லை; தண்ணீர் பிரச்னையால் சிறுநீரக கோளாறு
நாய்கள் தொல்லை; தண்ணீர் பிரச்னையால் சிறுநீரக கோளாறு
நாய்கள் தொல்லை; தண்ணீர் பிரச்னையால் சிறுநீரக கோளாறு
ADDED : அக் 18, 2024 04:50 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே மேலையூர் பரளச்சியில் தண்ணீரால் சிறுநீரக கோளாறினாலும், நாய்கள் தொல்லையாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி அருகே மேலையூருக்கு பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லை. பயணிகள் வெயில், மழையில் நின்று தான் பஸ் ஏற வேண்டியுள்ளது. ஆர்.ஜ., அலுவலக கட்டடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து விட்டது. ஊராட்சி மூலம் கட்டப்பட்ட பொது கழிப்பறை பராமரிப்பு இன்றி சேதமடைந்து விட்டது.
இந்த பகுதியில் உள்ள தண்ணீர் கடின தன்மையாகவும், குடிக்க உகந்ததாக இல்லாததாலும் பலருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் சிறுநீரக கோளாற்றினால் அவதிப்படுகின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்து பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். தெருக்களில் ரோடுகள் மோசமான நிலையில் உள்ளது. வாறுகால்கள் சேதமடைந்து கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது.
குப்பைகளை அள்ளாமல் ஆங்காங்கே குவிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவதால் புகை மண்டலமாக தான் காட்சி இருக்கிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கொசு புகை, கொசு மருந்து அடிப்பதில்லை.
குப்பையால் சுகாதார கேடு
ரமேஷ், விவசாயி : ஊரில் குப்பையை முறையாக அள்ளாமல் குப்பைகளை ஆங்காங்கு கொட்டி எரிக்கின்றனர். எரியும் புகையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. ஊரில் டெங்கு காய்ச்சல் சர்வ சாதாரணமாக உள்ளது. குவிக்கப்படும் குப்பை காற்றில் பறந்து பல பகுதிகளில் சிதறி கிடக்கிறது.
அடிப்படை வசதிகள் வேண்டும்
செல்வம், விவசாயி: பரளச்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளது. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட வேண்டும். பழுதாகி உள்ள ஜெனரேட்டரை சரி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் வந்து செல்வதால் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.
விவசாயிகள் அவதி
அருண்சிங், விவசாயி: பரளச்சி, மேலையூர் உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் வேளாண் துறை மூலம் நவீன தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்கள் எதுவும் இந்த பகுதி விவசாயிகளுக்கு தெரிவதில்லை.
பாலி ஹவுஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரசு வழங்கும் நிவாரணத் தொகை உடனடியாக கிடைப்பது இல்லை.