/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடுரோட்டில் போதையில் நடனம்-- லோகோ பைலட் மீது தாக்குதல்
/
நடுரோட்டில் போதையில் நடனம்-- லோகோ பைலட் மீது தாக்குதல்
நடுரோட்டில் போதையில் நடனம்-- லோகோ பைலட் மீது தாக்குதல்
நடுரோட்டில் போதையில் நடனம்-- லோகோ பைலட் மீது தாக்குதல்
ADDED : நவ 03, 2024 05:32 AM
ராஜபாளையம்: ரோட்டை மறித்து நடனமாடியவர்களை வழி விட கேட்டவரை செங்கலால் தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலை மறைவாக உள்ள 4 பேரை தேடுகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் பிரபு 34, விழுப்புரத்தில் ரயில்வே லோகோ பைலட்டாக பணிபுரிகிறார். விடுமுறைக்கு ராஜபாளையம் கம்பர் நகரில் சகோதரி வீட்டிற்கு வந்து காரில் திரும்பினர். வழியில் பி.எஸ்.கே மாலையாபுரம் பகுதி ரோட்டில் டூவீலரை தடையாக நிறுத்தி மது போதையில் சிலர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். காருக்கு வழிவிட கேட்டதற்கு அங்கிருந்த இளைஞர்கள் செங்கலால் தாக்கியதில் பின்னந்தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற தவிடன் 32, செல்வராஜ் 26, ராபின்சன் 27, உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து 4 பேரை தேடுகின்றனர்.