/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'டாக்பியா' ஸ்டிரைக் எதிரொலி; ரேஷன் கடைகள் இயங்கவில்லை
/
'டாக்பியா' ஸ்டிரைக் எதிரொலி; ரேஷன் கடைகள் இயங்கவில்லை
'டாக்பியா' ஸ்டிரைக் எதிரொலி; ரேஷன் கடைகள் இயங்கவில்லை
'டாக்பியா' ஸ்டிரைக் எதிரொலி; ரேஷன் கடைகள் இயங்கவில்லை
ADDED : அக் 08, 2025 01:19 AM
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் நேற்று டாக்பியா சார்பில் நடந்த ஸ்டிரைக்கால் 80 சதவீத ரேஷன் கடைகள் இயங்கவில்லை. 625 ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
விருதுநகரில் நேற்று முன்தினம் டாக்பியா எனும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடந்தது.
அதை தொடர்ந்து நேற்று ஸ்டிரைக் நடந்தது. மாவட்டத்தில் 935 ரேஷன் கடைகள் உள்ளன.
இவற்றில் 625 பேர் வரை ஆப்சென்ட் ஆகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 80 சதவீத கடைகள் இயங்கவில்லை.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரம்பினர். இந்த ஸ்டிரைக்கில் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் ஊழியர்கள் பங்கேற்றனர்.
கூட்டுறவுத்துறை சார்பில் ஸ்டிரைக்கில் இல்லாத மாற்று கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இழப்பை ஈடு செய்ததாக கூறினர்.
இந்நிலையில் இன்றும் வேலை நிறுத்தம் தொடர்வதாகவும், வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடக்கிறது.
அதிலும் உடன்பாடு எட்டாவிடில் வேலை நிறுத்தம் தொடரும் என டாக்பியா சங்கத்தினர் கூறினர்.