/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வடபத்ரசாயி கோயிலில் புஷ்ப யாகம்
/
வடபத்ரசாயி கோயிலில் புஷ்ப யாகம்
ADDED : அக் 08, 2025 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது.
இக்கோயிலில் செப்.24ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 12 நாட்கள் நடந்தது. அக்.2ல் செப்பு தேரோட்டம் நடந்தது.
நிறைவு நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு கோபால விலாசத்தில் புஷ்ப யாகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வடபத்ரசாயி, ஸ்ரீதேவி, பூதேவியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.