நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் 45, இவரது நண்பர்கள் குணசேகரன் 40, குமாரசாமி 50, ஆகியோர் கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு காரில் ஊருக்கு திரும்பினர். சாத்துார் அருகே சடையம்பட்டி சாய்பாபா கோயில் முன்பு கார் வந்தபோது கார் டயர் பஞ்சரானது. காரை ஓட்டி வந்த நாகராஜ் கீழே இறங்கி டிக்கியைத் திறந்து ஸ்டெப்னி டயரை எடுத்துக் கொண்டிருந்த போது மதுரை நோக்கி சென்ற மதுரை மாயக்கண்ணன் 35. (ஹெல்மெட் அணிந்திருந்தார்) ஓட்டி வந்த பைக் மோதியது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நாகராஜ் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.