/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்
/
மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்
ADDED : பிப் 15, 2024 04:41 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தின் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் இன்று காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கம், வத்தராயிருப்பில் கிருஷ்ணன்கோயில் கலகலிங்கம் பல்கலை, வெம்பக்கோட்டையில் செவல்பட்டி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, திருச்சுழியில் ரெட்டியார்பட்டி வட்டார அலுவலகம், ஸ்ரீவில்லிப்புத்துாரில் ஸ்ரீ பால கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி, ராஜபாளையத்தில் ராம்கோ பொறியியல் கல்லுாரி, சாத்துாரில் எஸ்.ஆர்.என்.எம்., கலை, அறிவியல் கல்லுாரி, நரிக்குடியில் ரெட்டியாபட்டி வட்டார அலுவலகம், காரியப்பட்டியில் சேது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி, அருப்புக்கோட்டையில் ஸ்ரீ சவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி, சிவகாசியில் எஸ்.எப்.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி நடக்கிறது.
கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshkmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் நேரில் பங்கேற்கலாம்.

