/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூதாட்டி பலாத்காரம் வாலிபர் கைது
/
மூதாட்டி பலாத்காரம் வாலிபர் கைது
ADDED : பிப் 08, 2025 01:20 AM
சத்திரப்பட்டி:விருதுநகர்மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி.
இவர் சமுசிகாபுரம் மெயின் ரோட்டில் இரவு 8:00 மணியளவில் நடந்து சென்ற போது அவ்வழியே டூவீலரில் வந்த வாலிபர் செல்லும் வழியில் இறக்கி விடுவதாக கூறி அவரை ஏற்றிகொண்டு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அங்கு மூதாட்டியை பலாத்காரம் செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினார்.
பின்னர் மூதாட்டி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு சேர்ந்தார். ராஜபாளையம் தெற்கு இன்ஸ்பெக்டர் செல்வி, மூதாட்டியிடம் விசாரித்ததுடன் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சமுசிகாபுரத்தை சேர்ந்த சுந்தர் 35, இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.