ADDED : டிச 28, 2024 05:24 AM
விருதுநகர்,: இளம் பசுமை ஆர்வலர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கோயம்புத்தூருக்கு 5 நாள்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2024-25ம் கல்வி ஆண்டில் அரசு, உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்காக இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி முகாம்கள் வாராந்திர பயிற்சி முகாம்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. இம்முகாமில் சிறப்பாக செயல்பட்ட 43 மாணவர்களை கோயம்புத்தூரில் உள்ள வனமகள் - ஐ.எப்.ஜி.டி.பி., என்ற இடத்திற்கு 5 நாள் களப்பயணமாக அழைத்து சென்றனர்.
இதில் சுற்றுப்புற சூழல், கலாச்சார செயல்பாடுகள் குறித்த நிபுணர்கள் உரை, சிறுவாணி மலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையிடுதல், வன அருங்காட்சியகம் பார்வையிடுதல், டாப்ஸ்லிப், பரம்பிக்குளம் புலிகள் வன காப்பகம் பார்வையிடுதல் போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கு பெறுகின்றனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

