/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டைக்கு மாலை நேர டவுன் பஸ் கட்: பயணிகள் தவிப்பு
/
அருப்புக்கோட்டைக்கு மாலை நேர டவுன் பஸ் கட்: பயணிகள் தவிப்பு
அருப்புக்கோட்டைக்கு மாலை நேர டவுன் பஸ் கட்: பயணிகள் தவிப்பு
அருப்புக்கோட்டைக்கு மாலை நேர டவுன் பஸ் கட்: பயணிகள் தவிப்பு
ADDED : அக் 22, 2024 04:29 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் மாலை நேரத்தில் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
காரியாபட்டியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தினமும் 6 வேளை டவுன் பஸ் இயக்கப்பட்டது. மாலை 6:35க்கு காரியாபட்டியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இயக்கப்பட்ட பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. அருப்புக்கோட்டைக்கு 5 நிமிடத்திற்கு ஒருமுறை மொபசல் பஸ் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்துவர். கே. கரிசல்குளம், வக்கணாங்குண்டு, கரியனேந்தல், தோணுகால், சமத்துவபுரம், ராமானுஜபுரம், கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராமத்தினர் டவுன் பஸ்சை நம்பி பயணிக்கின்றனர்.
அதிலும் இலவச பஸ் என்பதால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. திடீரென பஸ் இயக்கப்படாததால் இடைப்பட்ட கிராமத்தினர் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மாலை 6:35க்கு சென்று 7: 35க்கு அருப்புக்கோட்டையில் இருந்து புறப்படும் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் என பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதையடுத்து இரவு 8:45 க்கு செல்லும் பஸ் 9:35க்கு கடைசி பஸ்சாக இயக்கப்படுகிறது. பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் மறுபடியும் மாலை நேர பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரி கூறியதாவது: நேர அட்டவணைபடி தான் பஸ் இயக்கப்படுகிறது. மாலை அருப்புக்கோட்டைக்கு சென்று வரும் பஸ் இரவு 8:30 க்கு டெப்போவில் நிறுத்திவிடுகின்றனர். வசூல் பாதிக்கப்படுகிறது. அட்டவணைப்படி மதுரைக்கு இயக்கினால் கூடுதல் வசூல் கிடைப்பதுடன், இரவு 9:30 க்கு தான் டெப்போவுக்கு வர முடியும். கூடுதல் நேரம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. இருந்தாலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மறுபடியும் மாலை நேரம் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.