/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்க எதிர்பார்ப்பு: நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்தும் துவங்குவதில் தாமதம்

ADDED : மார் 03, 2024 05:55 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிக்கு நிதி ஒதுக்கி, இடம் தேர்வு செய்தும் பணி துவங்குவதில் தாமம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் அகழாய்வு பணிகளை துவங்க வேண்டுமென தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. தொல்லியல் மேடு என்ற உச்சி மேடு என பெயரிடப்பட்டு 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அதில் முதல் கட்ட அகழாய்வு பணியில் இரண்டு ஏக்கரில் 16 குழிகளில் 3254 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அடுத்ததாக 2023 ஏப். 6 ல் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கியது. இதில் மூன்று ஏக்கரில் 18 குழிகளில் சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், தங்க அணிகலன் யானை தந்ததால் ஆன பகடை, உள்ளிட்ட 4660 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. முதல் கட்டத்தை விட இரண்டாம் கட்டத்தில் 1406 பொருட்கள் கூடுதலாக கண்டெடுக்கப்பட்டது. இப்பணி 2023 அக். 19 ல் முடிவடைந்த நிலையில், இரண்டு கட்ட அகழாய்விலும் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் இந்த ஆண்டு ஜன. யில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் பணிகள் துவங்கவில்லை. ஏற்கனவே அகழாய்வு பணிகள் நடந்த இடத்திற்கு அருகே கிழக்குப் பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிக்காக ஒன்றரை ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிக்காக சமீபத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் துவங்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.