/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
/
நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 13, 2024 03:48 AM
காரியாபட்டி: நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை எழுந்துள்ளது.
காரியாபட்டி பகுதியில் மிகப் பெரியது கம்பிக்குடி கண்மாய். இக்கண்மாய் நிரம்பி உபரி நீர் பாப்பனம், சத்திர புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு செல்லும். நீர் ஆதாரமாக மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தால் மழை நீர், வரத்துக்கால்வாய் வழியாக இக்கண்மாய்க்கு வந்து சேரும். அதிக அளவில் விவசாயம் நடைபெற்றது.
நாளடைவில் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. இப்பகுதியில் நடைபெற்று வந்த விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நிலையூர் கால்வாய் திட்டத்தின் கீழ் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்த்திட்டம் கொண்டு வரப்பட்டு கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. தற்போது இதனை நம்பி ஏராளமாக விவசாயம் நடைபெற்று வருகிறது.
பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் சரி வர மழை இல்லை. இதனை நம்பி விவசாயம் செய்யப்பட்டு, தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. வாடிய பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரியாபட்டி அ.தி.மு.க.,வினர் நீர்வளத்துறை பொறியாளரிடம் வலியுறுத்தினர்.

