/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூழ்கிய நான்கு வழிச்சாலை மரக்கன்றுகள் மீண்டும் நட எதிர்பார்ப்பு
/
மூழ்கிய நான்கு வழிச்சாலை மரக்கன்றுகள் மீண்டும் நட எதிர்பார்ப்பு
மூழ்கிய நான்கு வழிச்சாலை மரக்கன்றுகள் மீண்டும் நட எதிர்பார்ப்பு
மூழ்கிய நான்கு வழிச்சாலை மரக்கன்றுகள் மீண்டும் நட எதிர்பார்ப்பு
ADDED : ஜன 19, 2024 04:18 AM

விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வனத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பசுமை வழிச்சாலையாக மாற்ற நடப்பட்ட மரக்கன்றுகளை சுற்றி தேங்கி நிற்கும் நீரால் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சாத்துார் நள்ளி வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வனத்துறையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் நடவு செய்துள்ளது.
இந்நிலையில் இவற்றில் சில மரக்கன்றுகள் பிழைத்து வந்து விட்டன. ஒரு பக்கம் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் பராமரிப்பும், இன்னொரு பக்கம் பருவமழை கைகொடுத்துள்ளதாலும் அவை நன்கு வளர்ந்துள்ளன. ஆனால் பல இடங்களில் மரக்கன்றுகள் பிழைக்கவில்லை.
மேய்ச்சலுக்கு வந்த ஆடுகளாலும், காய்ந்த சருகுகளை எரித்ததாலும் மரக்கன்றுகள் மடிந்து விட்டன. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் சர்வீஸ் ரோட்டை யொட்டி தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி அந்த மரக்கன்றுகள் அழுகும் அபாயத்தையும் சந்தித்துள்ளன. இன்னும் சில சாய்ந்து மடிந்தே போய்விட்டன.
மாவட்ட விளையாட்டு அரங்கம் நட்ட மரக்கன்றுகளும் வளராமல் மடிந்து விட்டன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வனத்துறை மடிந்த, பட்டு போன மரக்கன்றுகளின் இடத்தில் புதிய மரக்கன்றுகள் நட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பசுமை வழிச்சாலை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டதாக மாறும்.

