/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: அறை சேதம்
/
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: அறை சேதம்
ADDED : செப் 03, 2025 11:47 PM

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே கீழத்தாயில்பட்டி வெற்றிலையூரணியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை சேதம் அடைந்தது.
சிவகாசியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ளது. நாக்பூர் லைசன்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று மதியம் 12:00 மணிக்கு தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுக்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது மருந்தில் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.
சுதாரித்துக் கொண்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறினர். யாரும் காயமடையவில்லை. ஒரு அறை மட்டும் சேதமடைந்தது. ஏழாயிரம் பண்ணை வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் காயத்ரி 20, காயமடைந்தார்.
சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரதாப் மான்சிங். இவருக்கு ஆலமரத்துப்பட்டி ரோட்டில் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நாரணாபுரம் புதுாரைச் சேர்ந்த காயத்ரி வேலை பார்த்து வந்தார். இரு நாட்களுக்கு முன்பு ஆலையில் பேப்பர் கேப்ஸ் வெடியை பாக்கெட் போட்ட போது திடீரென தீப்பொறி பரவியதில் காயம் அடைந்தார். சிவகாசி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து போலீசார், வருவாய்த் துறையினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் உரிமையாளர், போர்மேன் சென்னகேசவன் 55, தகவல் தெரிவிக்கவில்லை. தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி பிரபு கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார், ஆலை உரிமையாளர், போர் மேன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.