/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் கலெக்டர் பெயரில் மீண்டும் போலி முகநுால்
/
விருதுநகர் கலெக்டர் பெயரில் மீண்டும் போலி முகநுால்
விருதுநகர் கலெக்டர் பெயரில் மீண்டும் போலி முகநுால்
விருதுநகர் கலெக்டர் பெயரில் மீண்டும் போலி முகநுால்
ADDED : மார் 31, 2025 01:17 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பெயரில் மீண்டும் போலி முகநுால் கணக்கு துவக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபட முயற்சி நடந்துள்ளது.
விருதுநகர் கலெக்டராக இருப்பவர் ஜெயசீலன். இவர் முகநுால் கணக்கில் அரசு நிகழ்ச்சிகள், அறிவிப்புகள், கரிசல் இலக்கியத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த செயல்பாடுகளை பதிவிட்டு வருகிறார்.
இவரின் புகைப்படத்துடன் ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில் போலி முகநுால் கணக்கு துவங்கப்பட்டது.
அதிலிருந்து சிலரிடம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயற்சி நடந்தது. இந்த போலி கணக்கு குறித்தும், அதன் மூலம் பணம் கேட்பவர்களிடம் யாரும் கொடுத்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு செய்தி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கலெக்டர் ஜெயசீலன் தன் முகநுால் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் மீண்டும் போலி முகநுால் கணக்கில் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளதாவது:
கலெக்டரின் முகநுால் பக்கத்தில் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புவர்களை மர்ம நபர்கள் குறி வைத்து மெசேஜ் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
மேலும் அவசர தேவை எனக்கூறி பண மோசடியில் ஈடுபட முயற்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் யாரும் முகநுால் பக்கத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டாம்.
இதுபோன்ற மோசடிகள் அடிக்கடி நடப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.