/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தம்பதியிடம் ரூ.3 லட்சம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் சிக்கினார்
/
தம்பதியிடம் ரூ.3 லட்சம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் சிக்கினார்
தம்பதியிடம் ரூ.3 லட்சம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் சிக்கினார்
தம்பதியிடம் ரூ.3 லட்சம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் சிக்கினார்
ADDED : நவ 21, 2025 01:32 AM
கருப்பூர்: தம்பதியிடம், 3 லட்சம் ரூபாய் பறித்த, போலி இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், குருசாமிபுரத்தை சேர்ந்தவர் பாதமுத்து, 43; ஐஸ்கிரீம் வியாபாரி. இவரது மனைவி பூண்டிமாதா, 40; இவர்களுக்கு குழந்தை இல்லாததால், சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்த அருண்குமார், 28, சட்டப்படி குழந்தையை தத்தெடுக்கலாம் எனக்கூறி, பணம் செலவாகும் என தெரிவித்தார்.
அதை நம்பிய தம்பதியர், 3 லட்சம் ரூபாயுடன், சேலம் வந்து, கருப்பூர் அருகே அருண்குமாரிடம் பணம் கொடுக்க முயன்றனர். அப்போது காரில் வந்த மர்ம கும்பல், ஈரோடு போலீசார் எனக்கூறி, 3 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.
கருப்பூர் போலீசார் விசாரித்து, சேலத்தை சேர்ந்த மதுராஜ், 37. ஏசுராஜ், 27, ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான அருண்குமார், பழனிபாரதி, 26, ஆகியோர், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
விசாரணையில், இன்ஸ்பெக்டராக நடித்தவர் ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த வெற்றிவேல், 48, என, தெரிந்தது.
நேற்று வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர்.

