/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பன்றிகளால் பயிர் சேதம் விவசாயி தற்கொலை
/
பன்றிகளால் பயிர் சேதம் விவசாயி தற்கொலை
ADDED : ஜூலை 12, 2025 07:57 PM

திருச்சுழி:திருச்சுழி அருகே காட்டுப்பன்றிகளால் வாழை தோப்பு நாசமானதால், விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து, 70. ௩ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டுள்ளார்.
நன்கு விளைந்த நிலையில், இரு நாட்களுக்கு முன், இரவில் காட்டுப்பன்றிகள் வாழை தோப்பிற்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்தன.
நேற்று முன்தினம் காலை, தோட்டத்திற்கு சென்று பார்த்த காளிமுத்து, வாழைகள் சேதமாகி கிடப்பதை பார்த்து விரக்தியில் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கினார்.
அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததில், அங்கு உயிரிழந்தார். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.