/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி கட்டனுார் கண்மாயில் வீணாகும் நீர் விவசாயிகள் வேதனை
/
நரிக்குடி கட்டனுார் கண்மாயில் வீணாகும் நீர் விவசாயிகள் வேதனை
நரிக்குடி கட்டனுார் கண்மாயில் வீணாகும் நீர் விவசாயிகள் வேதனை
நரிக்குடி கட்டனுார் கண்மாயில் வீணாகும் நீர் விவசாயிகள் வேதனை
ADDED : நவ 09, 2025 07:00 AM
நரிக்குடி: கட்டனூர் கண்மாயில் மடை சரிவர சீரமைக்காததால் நீர் வீணாக வெளியேறி வருகிறது. விவசாயம் பாதிக்கும் அச்சத்தில், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
நரிக்குடி கட்டனுாரில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது. நீர் ஆதாரமாக கிருதுமால் நதி நீர் வந்து சேரும். காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீரும் கண்மாய்க்கு வரும். கண்மாய் நிரம்பும் பட்சத்தில், கட்டணூர், உழுத்திமடை, பொட்டப்பச்சேரி, புதையனேந்தல் உள்ளிட்ட கிராமத்தினர் பாசனம் செய்வர். இக்கண்மாய் மூலம், 2 ஆயிரம் ஏக்கர் வரை நெல் நடவு செய்கின்றனர். 10 மடைகள் உள்ளன. படுமோசமாக இருந்தது. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின், சமீபத்தில் ரூ. பல கோடிகள் செலவில் இக் கண்மாய் சீரமைப்பு பணிநடந்தது. ஆனால் சரிவர சீரமைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல், சமீபத்தில் அப்பகுதியில் பெய்த மழைக்கு கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. மடையில் புதுப்பிக்கப்பட்ட ஷட்டர் சரிவர செயல்படாததால் நீர் வீணாக வெளியேறியது. கண்மாய் முழு கொள்ளளவை எட்டியும் பயனின்றி போனது. இதனை விவசாயிகள் அடைக்க முற்பட்டும் முடியவில்லை. ஏராளமானவர்கள் நெல் பயிரிட்டுள்ளனர். கண்மாயில் தண்ணீர் இருந்தால் விளைவிக்க முடியும். தற்போது வீணாக வெளியேறி, விவசாயம் பாதிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். வீணாகும் நீரை தடுக்க மடைகளின் ஷட்டர் சீராக செயல்பட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

