/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல்லில் மூன்று இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் மக்கள் அதிருப்தி

ADDED : நவ 09, 2025 06:55 AM

சிவகாசி: திருத்தங்கல்லில் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அருகே செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நகர் முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் நீரேற்றும் நிலையம் அருகே செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாகிறது.
பொதுவாக திருத்தங்கல்லில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தினமும் குடிநீர் விலைக்கு வாங்குவதில் சாத்தியமில்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.