/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு பாதிப்பில் பட்டாசு தொழிலாளர்கள்
/
தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு பாதிப்பில் பட்டாசு தொழிலாளர்கள்
தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு பாதிப்பில் பட்டாசு தொழிலாளர்கள்
தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு பாதிப்பில் பட்டாசு தொழிலாளர்கள்
ADDED : நவ 09, 2025 06:54 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு விதிமீறல்களால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இம்மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், போலீசார், வருவாய்த்துறை தீயணைப்புத்துறை அடங்கிய குழுக்கள் செயல் பட்டது. மத்திய பெட்ரோலியம் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் (பெசோ) குழுவினரும் ஆய்வு செய்தனர். பெசோ , மாவட்ட நிர்வாகம் 35, தொழிலக பாதுகாப்பு சுகாதாரத்துறை 40 உட்பட 105 பட்டாசு ஆலைகள் விதி மீறி இயங்கியதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது.
நான்குமாதமாச்சு பொதுவாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளுக்கு அங்குள்ள விதிமுறைகள் சரி செய்யப்படும் பட்சத்தில் ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் மீண்டும் ஆலைகள் இயங்க அனுமதி வழங்கப்படும். ஆனால் தற்போது நான்கு மாதங்கள் ஆகியும் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்குவதற்காக ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பித்தும் இதுவரையிலும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உரிய பதிலும் இல்லாததால் ஆலை உரிமையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.
விதிமீறல் காரணமாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படும் ஆலைகளுக்கு, மீண்டும் விதிக்கு உட்பட்டு செயல்பட தயாரான நிலையில் 42 நாட்களுக்குள் மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. ஆனால் தற்போது மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கவில்லை.
பற்றாக்குறைக்கு வாய்ப்பு இதனால் இந்த 2026 தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் 10000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

