/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சகதியாகும் ரோடு, தேங்கும் கழிவுநீர், எரியாத தெருவிளக்கு சிரமத்தில் தியாகி விஸ்வநாத தாஸ் நகர் மக்கள்

ADDED : நவ 09, 2025 06:53 AM
சாத்துார்: ரோடு போடாததால் மழைக்காலங்களில் சகதியாகி மக்கள் நடமாட முடியாமல் போகிறது. வாறுகாலின்றி சாலை யோர பள்ளங்களில் தேங்கும் கழிவுநீர், எரியாத தெருவிளக்குகள் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் தியாகி விஸ்வநாததாஸ் நகரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் இ. முத்துலிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தியாகி விஸ்வநாததாஸ் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.
மேலும் இந்தப் பகுதியில் பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் கம்பெனிகள், லாரி செட் நிறுவனங்கள், திருமண மண்டபம் உள்ளன. நகர் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சிறிய மழை பெய்தாலும் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
இதனால் மழைக்காலத்தில் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மக்களின் தண்ணீர் தேவைக்காக இந்த பகுதியில் ஒரே ஒரு அடி குழாய் மட்டுமே உள்ளது.
பொது குடிநீர் குழாய் வசதி இல்லை. மேலும் மங்கம்மாள் சாலை என அழைக்கப்படும் நகருக்கு செல்லும் பிரதான சாலையும் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காணப் படுகிறது.
தெருவிளக்குகள் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் இரவு நேரத்தில் நகர் பகுதியில் முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது.
அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை.