/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொய்த்த மழை பாதி, மிருகங்கள் பாதி கலங்கி நிற்கின்றனர் விவசாயிகள்
/
பொய்த்த மழை பாதி, மிருகங்கள் பாதி கலங்கி நிற்கின்றனர் விவசாயிகள்
பொய்த்த மழை பாதி, மிருகங்கள் பாதி கலங்கி நிற்கின்றனர் விவசாயிகள்
பொய்த்த மழை பாதி, மிருகங்கள் பாதி கலங்கி நிற்கின்றனர் விவசாயிகள்
ADDED : டிச 03, 2024 05:20 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்களை பன்றிகள் பாழாக்கியும், விளையும் நேரத்தில் மழை இல்லாததால் கருகியும் உள்ளதால் விவசாயிகள் கலங்கி உள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே தொப்புலாக்கரை, ராணிசேதுபுரம், ராஜகோபாலபுரம், பரளச்சி, புல்லா நாயக்கன்பட்டி, சுத்தமடம், கஞ்சம்பட்டி, ரெட்டியபட்டி, மறவர் பெருங்குடி, கத்தாளம்பட்டி, வேடநத்தம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, பாசி, உளுந்து பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.
மக்காச்சோளம் நன்கு விளைந்த நிலையில், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து செடிகளை பாழாக்கி விட்டன. சுற்றிலும் வேலிகள் அமைத்தும், கலர் கலர் சேலைகளை வேலியில் தொங்க விட்டும் பயன் இல்லை. இரவு நேரங்களில் காவலுக்கு இருந்தும், கூட்டமாக பன்றிகள் வருவதால் காவலுக்கு உள்ள விவசாயிகள் விரட்ட சில நேரங்களில் அவர்களை தாக்குகின்றன.இதனால் ஏக்கருக்கு பல ஆயிரங்கள் செலவழித்து பயிர்களை சாகுபடி செய்து அறுவடை நேரத்தில் பன்றிகள் பாழாக்குவதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதேபோன்று போதிய மழை இன்மை காரணமாக பயிர்களை 3 முறை விதைக்க வேண்டியுள்ளது. முளைக்க தேவையான மழை இல்லாததால் பயிர்கள் நிலத்திலேயே கருகி விடுகிறது. இதனாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சங்கரபாண்டி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: பயிர்களின் தேவைக்கு மழை பெய்யாததால் பாதி பயிர்கள் கருகி விட்டன. நன்கு விளைத்துள்ள சோள பயிர்களை பன்றிகள் கடித்து குதறி பாழாகி விட்டன. காட்டுப்பன்றிகளை விரட்ட பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், விவசாயிகள் அனைவரும் திரண்டு பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.