/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.40 லட்சத்தில் அமைத்த மடையில் நிற்காது வெளியேறும் தண்ணீர் விவசாயிகள் புலம்பல்
/
ரூ.40 லட்சத்தில் அமைத்த மடையில் நிற்காது வெளியேறும் தண்ணீர் விவசாயிகள் புலம்பல்
ரூ.40 லட்சத்தில் அமைத்த மடையில் நிற்காது வெளியேறும் தண்ணீர் விவசாயிகள் புலம்பல்
ரூ.40 லட்சத்தில் அமைத்த மடையில் நிற்காது வெளியேறும் தண்ணீர் விவசாயிகள் புலம்பல்
ADDED : அக் 27, 2025 04:07 AM

சேத்துார்: சேத்துார் அடுத்த தேவதானம் பெரியகுளம் கண்மாயில் புதிதாக அமைக்கப்பட்ட பாசனமடை தரமின்றி உள்ளதால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் வெளியேறி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் செல்லும் பாதையில் பெரிய குளம் கண்மாய் அமைந்துள்ளது 400 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் மடையை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மழைக்காலத்திற்கு முன்பு சேதம் அடைந்த மடையை அகற்றி புதிய மடை அமைக்கும் பணி நடந்து முடிந்தது.
இந்நிலையில் தற்போது பெய்த கனமழையில் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகமாகி நிரம்பும் நிலையை எதிர்பார்த்ததற்கு மாறாக தண்ணீரைத் தேக்கி நிறுத்தி தேவையான போது திறந்து விடுவதற்காக அமைக்கப்பட்ட மடை வழியே தண்ணீர் வெளியேறுவதுடன் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
கலைச்செல்வன், நீர் பாசன விவசாய சங்க தலைவர்: தற்போது அமைக்கப்பட்ட மழையின் தடுப்புச் சுவர் உயரம் குறைவு. மண் அரிப்பு ஏற்பட்டு வாய்க்கால் மண்மேவி உள்ளது.
புதிய மடையில் தண்ணீர் சேமிப்பிற்கு பதில் அதிக அளவில் வெளியேறியதால் மண் மூட்டைகளை வைத்து மடையை அடைத்து உள்ளனர். இதனால் தண்ணீர் திறப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் மண் சரிவு பாசன வாய்காலை பாதித்துள்ளது.
இது குறித்து நீர் பாசன அதிகாரிகள் கூறுகையில்: புதிதாக அமைக்கப்பட்ட மேடையில் ஷட்டருக்கும் கான்கிரீட் தளத்திற்கும் இடையில் நீர் வெளியேறுகிறது.
தற்காலிக ஏற்பாடாக மண் மூடைகளை வைத்து தண்ணீர் கசிவதை நிறுத்தியுள்ளோம். மடையில் ரப்பர்ஷிப் பொருத்தி எளிதில் திறந்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

