/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் சேதமான நாற்காலிகளை சீரமைக்கும் பணிகள்
/
அரசு மருத்துவமனையில் சேதமான நாற்காலிகளை சீரமைக்கும் பணிகள்
அரசு மருத்துவமனையில் சேதமான நாற்காலிகளை சீரமைக்கும் பணிகள்
அரசு மருத்துவமனையில் சேதமான நாற்காலிகளை சீரமைக்கும் பணிகள்
ADDED : அக் 27, 2025 03:34 AM

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள், வெளி நோயாளிகள் பிரிவுகளில் காத்திருப்பவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டு சேதமாகி ஓரங்கட்டப்பட்ட துருப்பிடிக்காத நாற்காலிகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு 680 ஆக இருந்த உள்நோயாளிகள் படுக்கைகள், தற்போது நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் 1276 படுக்கைகளாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
வெளி நோயாளிகள் பிரிவில் காத்திருக்கும் போது நிற்காமல் அமர்ந்து இருப்பதற்காகவும், உள் நோயாளிகள் பிரிவில் காத்திருப்பவர்களுக்காகவும் துருப்பிடிக்காத 3 இருக்கைகள் உடைய இரும்பு நாற்காலிகள் மருத்துவக்கல்லுாரி திறக்கப்பட்ட போது அமைக்கப் பட்டது.
ஆனால் மூன்று பேர் அமரும் நாற்காலிகளில் அடிக்கடி கூடுதல் நபர்கள் அமர்ந்து இருந்ததால் பாரம் தாங்காமல் நாற்காலிகள் ஒவ்வொன்றாக சேதமாக துவங்கியது. இப்படி சேதமான நாற்காலிகள் அனைத்தும் மருத்துவமனை தரைதளத்தின் பார்க்கிங் பகுதியில் ஓரங்கட்டப்பட்டது.
இதனால் நன்கொடையாக 1000 நாற்காலிகள் பெறப்பட்டு உள், வெளி நோயாளிகள் பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் நாற்காலிகளின் தேவையும் அதிகரித்தது.
இதையடுத்து சேதமான நாற்காலிகளை வெல்டிங் செய்து, தேவையான சீரமைப்பு பணிகள் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது.
மேலும் சேதமான படுக்கைகள், வீல் சேர், ஸ்ட்ரெக்சர் ஆகியவற்றையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளும் நடக்கிறது.

