/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் கூட்டமைப்பினர் டிராக்டரோடு வந்து முறையீடு
/
விவசாயிகள் கூட்டமைப்பினர் டிராக்டரோடு வந்து முறையீடு
விவசாயிகள் கூட்டமைப்பினர் டிராக்டரோடு வந்து முறையீடு
விவசாயிகள் கூட்டமைப்பினர் டிராக்டரோடு வந்து முறையீடு
ADDED : ஜன 28, 2025 05:04 AM

விருதுநகர்: விருதுநகரில் காவிரி குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரியும், முன்னாள் ராணுவ வீரரை கொண்டு சுடும் உரிமை வழங்கவும், கேரளாவை போல் ஊராட்சிகள் மூலம் சுடும் பணியை கண்காணிக்கவும் வலியுறுத்தி டிராக்டரில் வந்து மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில செயலாளர் ராமமுருகன் பேசினர்.
மாநில தலைவர் தலைவர் அர்ச்சுணன் கூறுகையில், கேரளாவில் காட்டு பன்றிகளை சுடும் பணியைஊராட்சிகளிடமே ஒப்படைத்துள்ளனர். ஓய்வு ராணுவவீரர்கள் மூலமாக சுட்டுப்பிடிக்கின்றனர். நாளுக்கு சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.
எதிர்காலத்தில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். மனித உயிர்களுக்கும் ஆபத்தான விலங்காக காட்டுப்பன்றிகள் உள்ளது. இரவு நேரங்களில் ரோட்டில் குறுக்கே நடமாடி விபத்தை ஏற்படுத்துகின்றன, என்றார்.

