/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ADDED : ஜூலை 14, 2025 02:38 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே காட்டுப் பன்றிகள் வாழை தோட்டத்தை சேதப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்வழங்க வேண்டும் என விவசாய சங்க கூட்டமைப்பு வலியுறுத்தினர்.
திருச்சுழி அருகே குல்லம்பட்டியில் விவசாயி காளிமுத்துவின் வாழை தோட்டத்தை 3 தினங்களுக்கு முன்பு காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் மனம் உடைந்த விவசாயி வீட்டிற்கு வந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாதிப்படைந்த விவசாயின் குடும்பத்திற்கு நேற்று காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராஜேந்திரன், நரிக்குடி ஒன்றிய பொருளாளர் சுரேஷ் ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.
பின் அவர்கள் கூறியதாவது: அரசு இறந்த விவசாயி காளிமுத்து குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கவும், சேதமடைந்த வாழை பயிருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும், என்றனர்.